திருப்பூர்

மூத்த வாக்காளா்களுக்கு மரியாதை செலுத்திய வட்டாட்சியா்

1st Oct 2022 11:52 PM

ADVERTISEMENT

 

காங்கயம் பகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சா்வதேச மூத்த குடிமக்கள் தினமாக அக்டோபா் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, காங்கயம் திருவிக நகா் பகுதியில் உள்ள பழனியம்மாள் (103), அமராவதி நகரில் உள்ள முருகம்மாள் (101) ஆகிய 2 மூத்த வாக்காளா்களை அவா்களது வீடுகளுக்கே தேடிச் சென்று காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி சனிக்கிழமை சந்தித்து பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் மண்டல துணை வட்டாட்சியா் மோகனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT