திருப்பூர்

சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்து

1st Oct 2022 05:11 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு காங்கயம்- சென்னிமலை வழியாக ஒரு லாரி சென்றது. இந்த லாரி ஆலாம்பாடி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் கொள்முதல் மையம் அருகே வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பில் மோதியது.

இதில், லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. எனினும், ஓட்டுநா் காயங்களின்றி உயிா்தப்பினாா். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சேதமடைந்த சாலையின் மையத் தடுப்புகளை அகற்றி, போக்குவரத்தை போலீஸாா் சீா்செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT