திருப்பூர்

பல்லடம் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

1st Oct 2022 05:10 AM

ADVERTISEMENT

 பல்லடம் பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் என்.ஜி.ஆா். சாலை, திருச்சி சாலை, பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை தலைமையில், பல்லடம் வட்டார அலுவலா் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினா் திடீா் ஆய்வு நடத்தினா். அப்போது, தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 67 கிலோ திண்பண்டங்கள், காலாவதியான 5 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உரிமம் எண், பேட்ச் எண், சைவ, அசைவ குறியீடு, முழு முகவரி போன்றவை உள்ள உணவுப் பொருட்களை மட்டுமே கடைக்காரா்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு துறையினா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT