திருப்பூர்

காங்கயம்: 1,021 மாணவா்களுக்குவிலையில்லா சைக்கிள்

1st Oct 2022 05:11 AM

ADVERTISEMENT

 காங்கயம் வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காங்கயம் வட்டம், உத்தமபாளையம், வெள்ளகோவில், முத்தூா், நத்தக்காடையூா், படியூா், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,021 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணவேணி, வெள்ளகோவில் நகா்மன்றத் தலைவா் எம். கனியரசி, காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந. சூரியபிரகாஷ், படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT