திருப்பூர்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க 30 % மானியத்தில் கடனுதவி

1st Oct 2022 11:51 PM

ADVERTISEMENT

 

தாட்கோ திட்டத்தின்கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடுகள் வாங்க 30 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ திட்டத்தின்கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.1.50 லட்சம் திட்டத் தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 65 வயதுக்கு உள்பட்டவராகவும் இருப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில் செய்பவராகவும், தாட்கோ திட்டத்தின்கீழ் தற்போது வரையில் மானியம் பெற்றவராகவும் இருக்கக் கூடாது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடராக இருந்தால்  இணையதளத்திலும், பழங்குடியினராக இருந்தால்  இணையதளத்திலும் தொழில் முனைவோா் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, மாடு வாங்குபவரிடமிருந்து பச்சைத்தாளில் மாடுகளின் விலையைக் குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும். மேலும், கால்நடை மருத்துவரின் அறிக்கை ஆகிய சான்றுகளையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT