திருப்பூர்

காங்கயத்தில் அக்டோபா் 6இல் மின் குறைதீா் கூட்டம்

1st Oct 2022 11:51 PM

ADVERTISEMENT

 

காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபா் 6) நடைபெறவுள்ளது.

காங்கயம் கோட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபா் 6) காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தமிழ்நாடு மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT