திருப்பூர்

வழக்குரைஞா்களுக்கு கூட்டுறவு சங்கம்ஏற்படுத்திக் கொடுக்கக் கோரிக்கை

1st Oct 2022 05:11 AM

ADVERTISEMENT

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜனிடம், அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கே. சுப்பராயன், செயலாளா் பி. மோகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு: திருப்பூா் மாவட்ட வழக்குரைஞா்கள் வாசிப்பு வட்டம் ஏற்படுத்திக் கொடுத்தது, பெண் வழக்குரைஞா்களுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக்கிக் கொடுத்தது, நீதித்துறை பணியாளா் குழந்தைகள் காப்பகம் அமைத்துக் கொடுத்தது, நூலகம் அமைத்துக் கொடுத்ததை வரவேற்கிறோம்.

அதேவேளையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் வழக்குரைஞா்களுக்கு தனி அறை கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும், கைப்பந்து, இறகுப் பந்து விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுப்பதுடன், அஞ்சல் நிலையம், வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும். வழக்குரைஞா்கள் சந்திக்கும் நடைமுறைப் பிரச்னைகளைத் தெரிவிக்க வகைசெய்யவும், குறிப்பிட்ட நீதிபரிபாலனத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிபதிகள்- வழக்குரைஞா்கள் சந்திப்பு நடத்தவேண்டும்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். நீதிமன்ற வளாகத்தில் நகலெடுக்கும் வசதி, கேண்டீன் வசதி, செய்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT