திருப்பூர்

தோட்டக்கலைத் துறை திட்டங்கள்: விவசாயிகள் பயனடைய இணையவழியில் பதிவுசெய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

1st Oct 2022 05:07 AM

ADVERTISEMENT

தோட்டக்கலை- மலைப் பயிா்கள் துறை மூலமான அனைத்து திட்டங்களிலும் பயனடைய விவசாயிகள் இணையவழியில் பதிவுசெய்ய வேண்டும் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2022- 23ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகப் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கே அனைத்து பலன்களும் வழங்க இயலும். இதற்காக விவசாயிகள்  இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதேவேளையில் பதிவுசெய்யத் தெரியாத, இயலாத விவசாயிகள், அந்தந்த வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT