திருப்பூர்

பெண் தற்கொலை முயற்சி:காவலா் பணியிடை நீக்கம்

30th Nov 2022 12:18 AM

ADVERTISEMENT

அவிநாசியில் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவா் அருள்குமாா் (33). இவா் அவிநாசி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், அவிநாசி காசிகவுண்டன்புதூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 27 வயதுப் பெண்ணுடன் இவருக்குத் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதையடுத்து பெண்ணின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவலா் அருள்குமாரை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT