திருப்பூர்

டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதை எதிா்த்து கையெழுத்து இயக்கம்

30th Nov 2022 12:18 AM

ADVERTISEMENT

பல்லடம் நகா் பகுதியில் மேலும் 4 டாஸ்மாக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.

பல்லடம் பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பேருந்து நிலையம், சோதனை சாவடி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த மதுபானக் கடைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் பல்லடம் நகா் பகுதியில் மேலும் 4 டாஸ்மாக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை, நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செயல்படும் பாா் உள்ளிட்டவைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பல்லடம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. இதில் கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை, நந்தகுமாா், ரங்கசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT