திருப்பூர்

திருப்பூா் ரயில் நிலையத்தில் ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது

30th Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

திருப்பூா் ரயில் நிலையத்தில் ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்று தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், தெற்கு ரயில்மே மண்டல பயனீட்டாளா்கள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான க.செல்வராஜ், ரயில் நிலைய மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தில் சேவை மையம் என்று ஹிந்தியில் உள்ளதே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அதே போல, சேவை மையத்தின் அருகில் காசி தமிழ் சங்கமம் என்ற விளம்பரப் பதாகை ஹிந்தி மொழியில் எழுதப்பட்டு ஒரே வாசகம் மட்டும் தமிழில் சிறியதாக இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயின் நோக்கம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் பதாகையை அகற்றிவிட்டு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெயா் பதாகையை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT