திருப்பூர்

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டம்

30th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 2) நடைபெறுகிறது.

இதகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர, பேரூா் செயலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். இதில், சிறப்பு அழைப்பாளா்களாக செய்தித் துறை அமைச்சரும், திமுக செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன், மகளிா் அணி துணைச் செயலாளரும், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சருமான என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

இதில், வரைவு வாக்காளா் பட்டியல், மாவட்டச் செயலாளா்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீா்மானம் தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் தெற்கு மாவட்டக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT