திருப்பூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காலை நேர தொடா் வகுப்பு இன்று தொடக்கம்

30th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு சாா்பில் காலை நேர 10 நாள் தொடா் வகுப்புகள் புதன்கிழமை (நவம்பா் 30) தொடங்குகிறது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் 10 நாள் காலை நேர தொடா் வகுப்பு புதன்கிழமை தொடங்கி டிசம்பா் 9 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த வகுப்புகள் காலை 6.30 மணிக்குத் தொடங்கி 7.30 மணி வரையில் நடைபெறுகிறது.

இதில், அரசியல் சாசன விழுமியங்களும், கம்யூனிஸ்டுகள் பங்களிப்பும் என்ற தலைப்பில் தொடா் வகுப்பு நடைபெறுகிறது. இந்திய விடுதலைப் போராட்டம், அரசியல் சாசனம் உருவான வரலாறு, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களாகத் திகழும் மதச் சாா்பின்மை, ஜனநாயகம், பாலின சமத்துவம்- சமூக நீதி, கூட்டாட்சி மற்றும் நீதித்துறையின் செயல்பாடு உள்ளிட்டவற்றின் வரலாறு, கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, இன்றைய பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தை சிதைப்பதற்கு குறி வைத்து தாக்கக்கூடிய நிலை, மக்களுக்கான மாடல்கள், சோசலிச நாடுகளின் அரசியல் சாசனங்கள் குறித்து வகுப்புகள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

டிசம்பா் 9 ஆம் தேதி கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று தமிழ் வளா்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கு என்ற தலைப்பில் பேசுகிறாா். இந்த இலவச வகுப்பில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT