திருப்பூர்

துலுக்கமுத்தூா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் போராட்டம்

30th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் சங்க கணக்காளரை மாற்றக்கோரி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினா்கள் கூறியதாவது: ஏற்கெனவே ஏ கிரேடாக இருந்த சங்கம் தற்போது பி கிரேடாக மாறி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு பணியாற்றும் கணக்காளருக்கு மாதம் ரூ.58 ஆயிரம் சம்பளத் தொகையாக வழங்கப்படுகிறது. ஏ கிரேடு மதிப்பில் உள்ள அல்லது வருமானம் நிறைந்த சங்கத்துக்கு கணக்காளரை மாற்றம் செய்தால் சங்கத்தின் நஷ்டத்தை ஈடு கட்டலாம் என பல முறை தெரியப்படுத்தியும், மகாசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இது குறித்து கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.அவிநாசியப்பன் கூறியதாவது: சங்கத்தின் கணக்காளா் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவதால் பணிக் கால அடிப்படையில் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து கூட்டுறவு உயா் அலுவலா்களிடம் தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் விரைவில் எங்களது கூட்டுறவு சங்கம் ஏ கிரேடு மதிப்புக்கு உயர போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்ட வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT