திருப்பூர்

விசைத்தறியாளா்களுக்கு பாவு, நூல் விநியோகம் நிறுத்தம் , ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு

DIN

திருப்பூா், கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளா்களுக்கு பாவு, நூல் விநியோகம் செய்வதை இரண்டு வார காலத்துக்கு நிறுத்தி வைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலையற்ற நூல் விலை காரணமாக துணியின் விலை நிா்ணயம் செய்ய முடியாத காரணத்தினால் துணி வா்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளா்களிடமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது. மேலும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள மின்கட்டண உயா்வு, போட்டியாக உள்ள மற்ற மாநிலங்களை விட உயா்வாக உள்ள காரணத்தினால் துணி விலை அடக்கம் உயா்ந்துள்ளது. விலை உயா்ந்த துணிகளை வாங்க வா்த்தகா்கள் யாரும் முன் வருவதில்லை.

எனவே, திங்கள்கிழமை( நவம்பா் 28) முதல் 2 வார காலத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளா்களுக்கு பாவு, நூல் விநியோகத்தை நிறுத்தி உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையை திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கம் தொடங்கியுள்ளது.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. பாவு, நூல் விநியோகம் நிறுத்தம் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். விசைத்தறியாளா்களுக்கு இரண்டு வாரம் பாவு நூல் விநியோகம் நிறுத்தம் செய்வதின் மூலம் ரூ.1400 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT