திருப்பூர்

கழிவு நீா் பிரச்னைக்கு தீா்வு காணக்கோரி பொதுமக்கள் போராட்டம்

DIN

வீடுகளுக்கு முன்பு கழிவு நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வுகாணக்கோரி ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நித்தியஜீவபுரத்தைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டாரச் செயலாளா் க.பிரகாஷ் தலைமை வகித்தாா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: ஊத்துக்குளி வட்டம், புலவா்பாளையம் நித்தியஜீவபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையை சில தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். மேலும், இந்த குடியிருப்பு வாசிகளுக்கு முறையான சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் கழிவு நீா் குடியிருப்புகளுக்கு அருகிலேயே தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே, வீடுகளின் முன்பாகத் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் (பொறுப்பு) சாந்தி, துணை வட்டாட்சியா் வசந்தா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஊராட்சி நிா்வாகத்தின் மூலமாக கழிவு நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் உறிஞ்சு குழி அமைக்கவும், ஆக்கிரமிப்பு வழித்தடம் தொடா்பாக அளவீடு செய்து 20 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT