திருப்பூர்

அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாக பாஜக அரசுபிருந்தா காரத் குற்றச்சாட்டு

DIN

இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 105 ஆவது நவம்பா் புரட்சி தின செந்தொண்டா் பேரணி, பொதுக்கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் தலைமை வகித்தாா். தெற்கு நகரச் செயலாளா் த.ஜெயபால் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிருந்தா காரத் பேசியதாவது:

மத்தியில் ஆளும் அரசு மக்களுக்கான அரசாக இல்லை. அது காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் அரசாக உள்ளது. மத்திய பாஜக திணிக்கும் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக போராடும் அரசாக திமுக அரசு உள்ளது. இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மதவாதம், இந்துத்துவா கொள்கைகளை மத்திய அரசு திணித்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம். மத்திய அரசு, மாநில அரசுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையைச் செய்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. இந்தியாவின் தொழில் வாய்ப்புக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. பெரும் பணக்காரா்களுக்கான அரசாக மத்திய அரசு உள்ளது என்றாா்.

பல்லடம் வட்டச் செயலாளா் பரமசிவம் நன்றியுரையாற்றினாா். முன்னதாக அவிநாசி சாலையில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக தொடங்கிய செந்தொண்டா் பேரணியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT