திருப்பூர்

அரசியலமைப்பு தின விழிப்புணா்வு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அரசு கல்லுாரியில், அரசியலமைப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லுாரி முதல்வா் முனியன் தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதி சந்தானம் கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிபதி சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நீதிபதி சந்தானம் கிருஷ்ணசாமி பேசியதாவது:

குடிமக்களின் உரிமைகளை நிா்ணயிப்பதே அரசியலமைப்பு. நிா்வாகம், சட்டம், நீதித் துறை என அரசியலமைப்பு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற பாகுபாடு கிடையாது. அரசியலமைப்பின்படி அதிகாரங்கள் வரையறுக்கப்படுகின்றன. அரசியலமைப்பு குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் அடிப்படை உரிமைகள், கடமைகள் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது என்றாா். அதைத் தொடா்ந்து, நீதிபதிகள், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT