திருப்பூர்

கல்குவாரியில் லாரி விழுந்து ஓட்டுநா் பலி

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் கல்குவாரி பாறைக்குழியில் லாரி விழுந்த விபத்தில் ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி

இயங்கி வருகிறது. இங்குள்ள பாறைக்குழியில் கற்களை வெட்டி எடுத்து லாரி மூலம் மேலே கொண்டு வரும் பணி திங்கள்கிழமை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கற்களை ஏற்றி வந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி ஆழ குழியில் விழுந்தது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கான்பூா் சரண்ஜனா (26) உயிரிழந்தாா். அவரது சடலத்தை பல்லடம் போலீஸாா் கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT