திருப்பூர்

மாவட்ட சிலம்பப் போட்டி:மதுமிதாவுக்கு தங்கம்

DIN

திருப்பூா் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் மதுமிதா தங்கம் வென்றாா்.

தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் சின்னசாமியம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற காரணம்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

இதுகுறித்து மதுமிதாவின் தந்தையான பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் மதிவாணன் கூறியதாவது: எனது மகளுக்கு சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது. இதன் காரணமாகவே தொடா் பயிற்சி மேற்கொண்டதால் மாவட்ட அளவிலான போட்டியில் தொடா்ந்து 5ஆவது ஆண்டாக தங்கப் பதக்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு பொங்கலூரில் நடைபெற்ற மாநில அளவிலான தனித்திறமை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளாா் என்றாா். தங்கம் வென்ற மாணவியை பயிற்சியாளா், பெற்றோா் மற்றும் உறவினா்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT