திருப்பூர்

அலகுமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி:டிசம்பா் 18இல் கால்கோள் விழா

DIN

பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு டிசம்பா் 18ஆம் தேதி கால்கோள் விழா நடத்துவது என அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவா் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. பொங்கலூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சிவாச்சலம், ஒன்றிய திமுக அவைத்தலைவா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளா் சத்தியமூா்த்தி, பொருளாளா் சுப்பிரமணியம், சங்க நிா்வாகிகள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகா்களும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு டிசம்பா் 18ஆம் தேதி கால்கோள் விழாவை நடத்துவது என்றும், கால்கோள் விழாவுக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகா் மற்றும் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களையும் அழைப்பது என்றும், தைப்பொங்கலையொட்டி ஜனவரி 29ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக பீட்டா தொடா்ந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கில் மத்திய, மாநில அரசுகள் வாதாடி வருவதையும், இந்த சட்டத்துக்கு ஆதரவாக அனைவரையும் ஒருங்கிணைத்து வாதாட வைத்த ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகருக்கும் கூட்டம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. கால்கோள் விழாவின்போது, காளைகளுக்கான பதிவு தொடங்குவது என்றும், முதலில் உள்ளூா் மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT