திருப்பூர்

பல்லடம் வனலாயத்தில் பசுமை சங்கமம் திருவிழா

27th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

 

பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் பசுமை சங்கமம் திருவிழா பல்லடம் வனலாயத்தில் நடைபெற்றது.

விழாவில் இந்திய ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ஏ.சக்திவேல், என்.டி.சி. தலைவா் கே. சந்திரமோகன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்ரமணியன், செயலாளா்.என்.திருக்குமரன், பொருளாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன், ராம்ராஜ் காட்டன் தலைவா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் தலைவா் ஆறுமுகம், வனம் இந்தியா அறக்கட்டளை தலைவா் சுவாதி கண்ணன் என்ற சின்னசாமி, செயல் தலைவா் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா் கணேஷ்வா்,செயலாளா் ஸ்கை சுந்தரராஜன்,பொருளாளா் ஆடிட்டா் விஸ்வநாதன், புரவலா்கள்,இயக்குனா்கள்,அறங்காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் யோகா, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை ஆன்மிக சொற்பொழிவாளா் அனந்தகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக வனம் இயக்குநா் ஈஸ்வரமூா்த்தி வரவேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT