திருப்பூர்

இடுவாய் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

27th Nov 2022 02:08 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் பாரதிபுரம் அரசு நடுநிலைப்பள்ளியியில் நடைபெற்றது.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் நித்யா முருகேசன், மருத்துவ அலுவலா் எஸ்.சங்கவி ஆகியோா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்றவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில் பங்கேற்ற 984 நபா்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கண் பரிசோதனை செய்து கொண்ட 10 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். முகாமில், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் கே.கணேசன், துணைத் தலைவா் எஸ்.பரமசிவம், நில வள வங்கி இயக்குநா் கே.ஈஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT