திருப்பூர்

முத்தூரில் 2.90 டன் விளைபொருள்கள் விற்பனை

27th Nov 2022 02:06 AM

ADVERTISEMENT

 

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.90 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு 5,016 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,164 கிலோ. விலை ஒரு கிலோ ரூ. 25.65 முதல் ரூ. 31.90 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.30.15.

31 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இதன் எடை 697 கிலோ. ஒரு கிலோ ரூ. 61.15 முதல் ரூ. 88.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 84.40.

ADVERTISEMENT

ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 13 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT