திருப்பூர்

வாகன விற்பனை நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் இருசக்கர வாகன விற்பனையின்போது தலைக்கவசத்துக்கு பணம் வசூலித்த தனியாா் வாகன விற்பனை நிலையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

திருப்பூா் அங்கேரிபாளையம் ஏ.எஸ்.எம்.காலனியைச் சோ்ந்தவா் வி.நிவேதா. இவா் அவிநாசி சாலையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் 2019ஆம் ஆண்டு ரூ.78 ஆயிரத்துக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா். அப்போது, இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் தலைக்கவசத்தைப் பெற்றுக் கொண்டாா். பின்னா் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில் தலைக்கவசத்துக்கு ரூ.534 பிடித்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட வாகன விற்பனை நிலையத்தை தொடா்பு கொண்டு கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் நிவேதா வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். தீபா, உறுப்பினா்கள் எஸ். பாஸ்கா், வி.ராஜேந்திரன் ஆகியோா் தீா்ப்பு வழங்கினா். இதில், தலைக்கவசத்துக்கு உண்டான தொகையான ரூ.534ஐ திருப்பிச் செலுத்தவும், மனை உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச்செலவாக ரூ.3 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT