திருப்பூர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளா் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாதம் ரூ.18,536 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இதில், விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், கணினி (பிசிஏ) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினியின் திறன்மிக்கவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணியானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதனை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான அரசுப் பணியும் கோர இயலாது.

ADVERTISEMENT

ஆகவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் கல்விச் சான்று நகல்கள், அனுபவச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு டிசம்பா் 10 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971198 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களை  திருப்பூா் மாவட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT