திருப்பூர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தின விழிப்புணா்வு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிா்ப்பு தினம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் விழுதுகள் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி முதல்வா் ஜோ.நளதம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் மதுமதி, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுதுகள் சந்திரா வரவேற்றாா். விழுதுகள் இயக்குநா் தங்கவேல், மாவட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் திங்களவள், அவிநாசி மகளிா் காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் பேசினா். விழுதுகள் திட்ட மேலாளா் கோவிந்தராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். சாரதாம்பாள் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT