திருப்பூர்

விசைத்தறிகளுக்கு பிரத்யேக மின் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும்

19th Nov 2022 12:06 AM

ADVERTISEMENT

விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு பிரத்யேக மின் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என்று நாடா இல்லா தறி நெசவாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நாடா இல்லா தறி நெசவாளா்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க செயலாளா்கள் கோகுல்குமாா், ரவிசந்திரன், பொருளாளா் கோவிந்தராஜ், துணைத் தலைவா் தங்கவேல், ஆலோசகா் வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து சங்கத் தலைவா் வெங்கடேசன் கூறியதாவது:

மின் கட்டண உயா்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு பிரத்யேக மின் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும். ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனிக் குழு அமைத்து எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தித் துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆா்டா்கள் வருவதில்லை.

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசா்வ் வங்கியின் இரண்டு சதவீத வட்டி உயா்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறையினா் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும். சோலாா் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT