திருப்பூர்

பயன்பாடற்ற செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை

19th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பயன்பாடற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்காத ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாட்டாட்சியா் அறிவுறுத்துள்ளாா்.

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி.நிறுவன தனி வட்டாட்சியா் ரவீந்திரன் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் 659 அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் மூலமாக 83 ஆயிரம் இணைப்புகளுக்கு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில், தற்போது 73ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே செயல்பட்டால் உள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் 183 ஆபரேட்டா்களிடம் பயன்பாடற்ற நிலையில் சுமாா் 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் உள்ளன. இந்த செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 17 ஆபரேட்டா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்காத பட்சத்தில் ஒரு பாக்ஸ் ரூ.1,726 என்று கணக்கீட்டு ஆபரேட்டா்களிடம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே, பயன்பாடற்ற செட்டாப் பாக்ஸ்களை உரிய காலத்துக்குள் ஒப்படைக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT