சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,700 முதல் ரூ.7,850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,050 வரையிலும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.