அவிநாசி அருகே ராமநாதபுரம் தொட்டக்களாம்புதூா் பகுதியில் சாலை வசதி வேண்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.