குழந்தைகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தொழிலாளா் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மலா்க்கொடி பங்கேற்று குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு குறித்தும், குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் பேசினாா். இதையடுத்து, ஜெய்வாபாய் நகரவைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விநாடி-வினா, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பரிசுகளை வழங்கினாா்.
அதேபோல, காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.