திருப்பூர்

சுகாதாரப் பணிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் ஆய்வு

1st Nov 2022 01:18 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் சுகாதாரப் பணிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 ஆவது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் திங்கள்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, 14 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் முரட்டாண்டி, நகராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் லட்சுமணன், ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT