திருப்பூர்

காங்கயத்தில் நாளை மின் குறைதீா் கூட்டம்

1st Nov 2022 01:21 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 2) நடைபெற உள்ளது.

காங்கேயம் கோட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது.

மின் பயனீட்டாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT