திருப்பூர்

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

1st Nov 2022 01:18 AM

ADVERTISEMENT

திருப்பூா் கே.செட்டிபாளையம் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பெயிண்டரின் சடலத்தை மீட்டு நல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள கே.செட்டிபாளையம் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் நல்லூா் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் அப்பகுதியில் பெயிண்டா் வேலை செய்து வந்த சண்முகம் (50) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT