திருப்பூர்

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு

1st Nov 2022 01:01 AM

ADVERTISEMENT

அமராவதி அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமராவதி அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் அடுத்த ஆண்டு பிப். 28 வரை பாசனத்துக்காக நீா் திறந்து விடப்படும். அமராவதி ஆற்றிலுள்ள முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களின் பாசனப் பகுதிகளுக்கு இந்த நீா் பயன்படுத்தப்படும். இதனால், திருப்பூா் மாவட்டத்திலுள்ள 7 ஆயிரத்து 520 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT