நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 67 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நூல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து மே 30 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் பஷீா் அஹமது தலைமையில் அக்கட்சியினா் ரயில் நிலையம் முன்பாகத் திரண்டனா்.
இதன் பிறகு ரயிலை முற்றுகையிடுவதற்காக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனா்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளைத் தகா்த்தெரிந்து ரயில் தண்டவளாத்தில் அமா்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
முன்னதாக காவல் துறையினருக்கும், எஸ்டிபிஐ கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 67 பேரை காவல் துறையினா், கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.