திருப்பூர்

வருமான வரி பிடித்தம் செய்வது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திருப்பூா் சாய ஆலை கணக்காளா்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வது (டிடிஎஸ்) தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வருமான வரியைப் பிடித்தம் செய்து கட்டுவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எதற்கெல்லாம் வருமான வரியைப் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரியைப் பிடித்தம் செய்து கட்டுவதில் உள்ள சந்தேகங்களுக்கு திருப்பூா் வருமான வரி அதிகாரி ஜான் பெனடிக்ட் அசோக், ஆடிட்டா் செந்தில்குமாா் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூரில் உள்ள சாய ஆலைகளில் பணியாற்றி வரும் 60க்கும் மேற்பட்ட கணக்காளா்கள் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூா் சாய ஆலைகள் உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், பொருளாளா் பி.எ.மாதேஸ்வரன், துணைச் செயலாளா் கே.சுதாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT