திருப்பூர்

தமிழகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் 80 நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம்

DIN

தமிழகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் 80 நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி வலியுறுத்தினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ரூ.5.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் நீதிபதி அறைகள், எழுத்தா் அறை, நூலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டு அடுக்கு தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தையும், உடுமலையில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற கட்டடத்தையும் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் நடராஜன் வரவேற்றாா். இதில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், எஸ்.எஸ்.சுந்தா், பி.டி.ஆஷா, கே.கல்யாணசுந்தரம், அமைச்சா்கள் ரகுபதி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் வினீத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி பேசியதாவது:

தமிழகத்தில் வாடகை கட்டடத்தில் 80 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே நிதி சுமையைக் குறைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டும். சென்னை உயா்நீதிமன்றம் அதிக அளவிலான வழக்குகளுக்குத் தீா்வு கண்டு இந்திய அளவில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தையொட்டி உள்ள காவல் துறைக்குச் சொந்தமான இடத்தை நீதித் துறைக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். திருப்பூா் குடும்ப நல நீதிமன்றத்துக்குப் போதிய இட வசதி இல்லை. இதற்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.

சட்டத் துறை அமைச்சா் ரகுபதி: உடுமலையைச் சோ்ந்தவா்கள் மேல்முறையீட்டு வழக்குகளுக்காக திருப்பூா், தாராபுரம் பகுதிகளுக்கு சென்று வந்த நிலையைப் போக்கும் வகையில், உடுமலையில் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதித் துறைக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தால்தான் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்பதற்காக நீதித் துறைக்குத் தேவையான வசதிகளை முதல்வா் ஸ்டாலின் செய்து தருகிறாா். வழக்குரைஞா் சேம நல நிதியை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி அறிவித்ததோடு, அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் ரூ.10 கோடியாக உயா்த்தியுள்ளாா் என்றாா்.

இவ்விழாவில் திருப்பூா் மாநகராட்சி 4ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் தேன்மொழி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், செம்மிபாளையம் ஊராட்சித் தலைவா் ஷீலா புண்ணியமூா்த்தி, மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வழக்குரைஞா் குமாா், பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், செயலாளா் சக்திவேல், உடுமலை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீதா், செயலாளா் முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.மாவட்டத் தலைமை கூடுதல் நீதிபதி புகழேந்தி நன்றி கூறினாா்.

உடுமலையில்...:

உடுமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயா் நீதிமன்ற நீதியரசா்கள் டி.கிருஷ்ணகுமாா், எஸ்.எஸ்.சுந்தரம், பி.டி.ஆஷா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு திறந்துவைத்தனா். அப்போது கூடுதல் மாவட்ட நீதிமன்ற அமா்வு நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.முரளிதரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விழாவில் முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் மற்றும் வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT