திருப்பூர்

‘ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

DIN

தமிழகத்தில் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஒரு ஆண்டாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காடத் துணிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

இதைத் தொடா்ந்து, நூல் விலையைக் குறைக்கக் கோரி ஜவுளி உற்பத்தியாளா்கள் கடந்த மே 22ஆம் தேதி முதல் 15 நாள் தொடா் வேலைநிறுத்ததப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2 லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஜவுளி உற்பத்தியாளா்களின் போரட்டத்தை கருத்தில் கொண்டு நூல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்வதுடன், பஞ்சு பதுக்களைக் கட்டுப்படுத்தி ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT