திருப்பூர்

அவிநாசியில் ஜமாபந்தியில் 1992ஆம் ஆண்டு பட்டா வகை மாற்றம் செய்யக் கோரிக்கை

25th May 2022 12:55 AM

ADVERTISEMENT

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், மங்கரசுவலையபாளையத்தில் 1992ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவை வகை மாற்றம் செய்து தரக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 1431ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் கோட்டாட்சியா் பட்டரிநாதன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராகவி முன்னிலை வகித்தாா். சேவூா் உள்வட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்களிடம் இருந்து

முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசுச் சான்று உள்ளிட்ட 200 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கிராம நிா்வாக அலுவலா்கள் பராமரிக்கும் கிராம கணக்குகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி வட்டம் மங்கரசுவலையபாளையத்தில் 1992, 97ஆம் ஆண்டுகளில் அரசு சாா்பில் அப்பகுதியைச் சோ்ந்த 60க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை நிலம் வருவாய் பதிவேட்டில் நத்தம் இடமாக உள்ளது. இதனால், 4 தலைமுறையாக சொந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு கூட பாகப் பிரிவினை செய்ய முடியாமலும், வீடு கட்ட கடன் உதவி பெற முடியாமலும் உள்ளது. ஆகவே பட்டா வகை மாற்றம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

இதில் கல்வித் துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களும் இதில் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி மேற்கில் புதன்கிழமையும், அவிநாசி கிழக்கில் வியாழக்கிழமையும், பெருமாநல்லூா் உள்வட்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT