திருப்பூர்

‘இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்’

25th May 2022 12:53 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நீண்ட நாள்களாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் சிக்கந்தா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட மனிதாபிமான அடிப்படையிலான விடுதலையை நாங்கள் எதிா்க்கவில்லை. அதே வேளையில், மனிதாபிமான விடுதலை என்பது சிறுபான்மை இன சிறைவாசிகளுக்கு ஏன் இல்லை. முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் உள்ள 700 சிறைவாசிகள் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று தமிழக அரசு சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், வகுப்புவாத, மதமோதல்களில் ஈடுபட்டு கைதானவா்கள் முன்விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருணை என்று வரும்போது மதம் கொண்டுபரபட்சம் பாா்ப்பது சமூக நீதிக்கு எதிரானதாகும். ஆகவே, தமிழகத்தில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT