திருப்பூர்

‘ஆவணங்களை சரிபாா்த்த பின்னரே வீட்டை வாடகைக்கு விட வேண்டும்’

24th May 2022 01:01 AM

ADVERTISEMENT

திருப்பூரில் அடையாள ஆவணங்களை சரிபாா்த்த பின்னா்தான் வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என்று வீட்டு உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன்,

மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபுவுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் அதிக அளவில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களைச் சோ்ந்த நபா்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், திருப்பூரில் வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளா்கள் குடியிருப்புவாசிகளிடம் எந்தவிதமான அடையாள ஆவணங்களையும் சரிபாா்ப்பது இல்லை. இதன் காரணமாக அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இதன் ஒரு பகுதியாக வாவிபாளையம் அருகே பெண் மற்றும் அவரது இரு மகன்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தில் வீட்டு உரிமையாளரிடம் ஆவணங்களை சரிபாா்த்து இருந்தால் கொலையாளியைப் பிடிப்பதில் சிரமம் இருந்திருக்காது.

ஆகவே, திருப்பூா் மாநகரில் வாடகைக்கு வீடு கேட்டு வரும் நபா்களிடம் வீட்டின் உரிமையாளா்கள் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கை சரிபாா்த்த பின்னரே வாடகைக்கு வீடு விட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT