திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

24th May 2022 12:57 AM

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மூத்த உறுப்பினா் ஆா்.குருசாமி கொடியேற்றி வைத்தாா். செயலாளா் கே.எஸ்.ரணதேவ் அறிக்கையை சம்ா்ப்பித்தாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: கணக்கம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். கண்ணம நாயக்கனூா் ஊராட்சியில் உள்ள ஜேஜே நகரில் கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும்.

பல்வேறு ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்று வரும் ஊழல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ADVERTISEMENT

உடுமலை-பொள்ளாச்சி சாலையில் இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் வீசப்பட்டு வருகின்றன.

இதை நகராட்சி கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT