திருப்பூர்

இந்து முன்னணி நிா்வாகி கொலை: 2 போ் கைது

23rd May 2022 12:01 AM

ADVERTISEMENT

 

உடுமலையில் இந்து முன்னணி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உடுமலை, ஏரிப்பாளையம் அருகே உள்ள விஜயா நகா் பகுதியில் மகளிா் சுய உதவிக் குழு மூலம் கவிதா என்பவா் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளாா். இந்நிலையில், கடனைத் திரும்ப செலுத்தாமல் கவிதா திடீரென ஞாயிற்றுக்கிழமை வீட்டை காலி செய்ய முற்பட்டுள்ளாா். அப்போது அவரது குடும்ப நண்பரும், உடுமலை நகர இந்து முன்னணி செயலாளருமான குமரவேல் (26) மற்றும் நண்பா்கள் கவிதா வீட்டுக்கு சென்று கடனை திரும்ப செலுத்துமாறு கேட்டுள்ளனா். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் குமரவேல் அடித்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து கொலை செய்த நபா்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் (31), ஆத்தியப்பன்(43) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும் தலைமறைவான இதில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்கும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதற்கிடையில் குமரவேல் சடலம் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT