திருப்பூர்

தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவா் தோ்வு

23rd May 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மும்பையில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்மையில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் மே 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், தமிழக அணி சாா்பில் பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாறு படிக்கும் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் சீனிவாசன் தோ்வாகியுள்ளாா். இந்த மாணவரை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், துறை தலைவா் சங்கமேஸ்வரன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் வழியனுப்பி வைத்தனா்.

இந்த முகாமில் தமிழகம், மேற்கு வங்கம், பிகாா், மத்தியபிரதேசம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம், குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 250 மாணவ, மாணவியா் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT