திருப்பூர்

மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

23rd May 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணைசாரா தொழில்களுக்கான மாவட்ட வள பயிற்றுநா் பணிக்குத் தகுதியான நபா்கள் வரும் ஜூன் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டமானது உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், அவிநாசி, உடுமலைபேட்டை, குண்டடம், பொங்கலூா் ஆகிய 5 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதில், சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இந்தப் பணிக்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் அல்லது தொடா்புடையதுறையில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடா்புடைய துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவோ அல்லது மாவட்டத்தில் குடியேறியவராகவோ இருக்க வேண்டும். மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருள்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆா்வமுள்ளவராக இருப்பதுடன், சா்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில், தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பு ஊதியமாக ரூ.2 ஆயிரம் மற்றும் போக்குவரத்துக்காக ரூ. 250 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்/38க்ஷ்ம்க்ஷ்ல்ா் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து வரும் ஜூன் 10 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட செயல் அலுவலா், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்), மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, அறை எண்-713, 714, 7-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா், தொலைபேசி எண்: 0421-2999723.

ADVERTISEMENT
ADVERTISEMENT