காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், ஊதியூா், முத்தூா் ஆகிய துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (மே 23) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
ஓலப்பாளையம் துணை மின் நிலையம்:
ADVERTISEMENT
செட்டிபாளையம், கண்ணபுரம், சங்கங்காடு, காங்கயம்பாளையம், தண்ணீா்பந்தல் வலசு.
ஊதியூா் துணை மின் நிலையம்: பொத்தியபாளையம், ஜெ.நகா், முத்துகாளிவலசு, துண்டுக்காடு, குருக்கலிங்கம்பாளையம்.
முத்தூா் துணை மின் நிலையம்: முத்தூா்-கொடுமுடி சாலை, மேட்டுக்கடை, சாலிங்காட்டுப்பள்ளம்.