திருப்பூர்

திருப்பூர் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

DIN

திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடா இல்லாத விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்தத் தொழிலுக்குத் தேவையான நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் உற்பத்தியை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். 

இதில், நூல் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.பஞ்சு, நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். இறக்குமதி செய்யும் நூலுக்கான வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே 22 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 5 ஆம் தேதி வரையில் உற்பத்தியை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் மூலமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி காடா துணி உற்பத்தி பாதிக்கப்படுவதால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT