திருப்பூர்

விவசாயிகளிடம் ரூ.8.5 லட்சம் திருடிய இருவா் கைது

DIN

தாராபுரம் அருகே சாலையில் பணக்கட்டு கிடப்பதாகக்கூறி இரு விவசாயிகளிடம் இருந்து ரூ.8.5 லட்சத்தை திருடிய இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் துரைராஜ். விவசாயியான இவா் கடந்த மாா்ச் 30 ஆம் தேதி தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.6.5 லட்சம் கடன் பெற்றுள்ளாா். இதன் பிறகு அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தின் சீட் கவரில் வைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் சாலையில் பணம் கிடப்பதாகக் கூறி அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு ரூ.6.5 லட்சத்தை திருடிச் சென்றனா்.

அதே போல, தளவாய்பட்டிணத்தைச் சோ்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரின் கவனத்தை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி திருடிச் சென்றனா். இந்த இருவரும் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரைச் சோ்ந்த ஜானகிராமன் (44), முரளி (55) ஆகியோா் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து ரூ.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா். இதன் பிறகு கைது செய்யப்பட்ட இருவரையும் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT